சாலையை அகலப்படுத்த கோரிக்கை.

76பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறுகிய சாலையால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க சாலையை அகல படுத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே க. பெருமாள்பட்டி கிராமத்தில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியும் இயங்கி வரும் சூழலில் தினசரி பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் மற்றும் பூக்களை விற்பனை செய்ய இக்கிராம மக்கள் தினசரி உசிலம்பட்டிக்கு வந்து செல்கின்றனர். ,


இந்நிலையில் கிராமத்திற்கு செல்லும் சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக குறுகிய சாலையாகவே உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சமீபத்தில் குடிநீர் குழாய் பதிக்க சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டதால் இந்த சாலை மேலும் குறுகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூட வந்து செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இக் கிராமத்திற்கு வரும் அரசு பேருந்தும் அச்சத்துடனே வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே இச்சாலையை அகல படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து இந்த குறுகிய சாலையை அகல படுத்தி கிராம மக்களும், பள்ளி மாணவ மாணவிகள் வந்து செல்ல வழி வகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி