மேலூர் - Melur

மேலூர்: சிவாலயத்தில் அன்னாபிஷேகம் வழிபாடு

மேலூர்: சிவாலயத்தில் அன்னாபிஷேகம் வழிபாடு

மதுரை மாவட்டம் மேலூர் தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாதம் யெளர்ணமி அன்னாபிஷேக சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு நடைபெற்றது. இன்று (நவ. 15) காலை 11.30 மணிக்கு சங்கரலிங்கம் சுவாமிக்கும், எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், சுவர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. சங்கரலிங்கம் சுவாமி சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார். கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம் அபிஷேக பால், பஞ்சாமிர்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా