மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்
டீ குடிக்க, உணவு சாப்பிட என, ஒரு கிலோமீட்டர் தள்ளிச் செல்ல வேண்டிய சூழல் நிலவுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இயங்காமல் இருக்கும் அந்த உணவகத்திற்கு உள்ளேயும் மாணவர்கள் அமர்ந்து படிக்கின்றனர். தினசரி வந்து செல்லும் வாசகர்கள் மற்றும் மாணவர்கள் உணவிற்காக வெளியே சென்றுவிட்டு, மீண்டும் நூலகத்துக்குத் திரும்பிவந்து படிக்க வேண்டியிருக்கிறது. இதனால் பொதுமக்களும் பணியாளர்களும் விரைவில் உணவகம் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.