திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கடன் தொல்லை காரணமாக பூவித்தா (40) என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது கணவர் 6 மாதமாக உடல்நலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதன் காரணமாக அப்பெண் கடன் வாங்கியுள்ளார். அதனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தினால் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கே வந்து கடனை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார்.