பொம்மை கடைக்குள் புகுந்த லாரி.. 5 பேர் காயம்

57பார்த்தது
பொம்மை கடைக்குள் புகுந்த லாரி.. 5 பேர் காயம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிழங்கு மாவு ஏற்றி வந்த லாரி, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பொம்மை கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தம்மம்பட்டியில் இருந்து கிழங்கு மாவு லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரி, மெட்டாலா பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி