சென்னை மற்றும் கேரளா, கோழிக்கோடு பகுதியில் நடந்த சோதனையில் ரூ.1.5 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA Act) கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஸ்ரீ கோகுலம் சிட்ஸ் & பைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை செய்தது. இந்த சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.1.5 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.