சன் ரைசஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் 19-வது லீக் போட்டியில் இரு அணிகளும் பலபரீட்சை நடத்த உள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐதராபாத் அணி கடைசி 3 போட்டிகளில் படுதோல்வியடைந்தது. இந்த போட்டியில் குஜராத்தை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.