அமெரிக்காவில் தற்போது அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்கிற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிரம்பின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகவும், எலான் மஸ்க் தலைமையிலான DOGE-யின் ஆட் குறைப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. எலான் மஸ்க்கின் இந்த திடீர் முடிவை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டு வருகின்றன. மேலும், “அதிபர் டிரம்ப் நம்மை உலகளாவிய மந்தநிலைக்குள் தள்ள போகிறார்” என ஒருவர் கூறியுள்ளார்.