ரஷ்யாவில் சாலையோரம் வசிக்கும் மக்கள், போதைக்கு அடிமையானவர்கள், வயதானோர் என 1992 -2006 வரை 48 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இக்கொலைகளை செய்த அலெக்சாண்டர் பிசிஸ்கின் (50) 2007இல் கைது செய்யப்பட்டார். 'செஸ்போர்ட் கில்லர்' என ரஷ்ய ஊடகங்களால் புனைப் பெயரில் அழைக்கப்பட்ட அவர், தற்போது மேலும் 11 பேரை கொலை செய்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இது ரஷ்ய போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.