உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், தண்ணீர் பாட்டிலை தொட்டதற்காக 15 வயது தலித் மாணவனை ஆசிரியர் தாக்கியுள்ளார். ஹரிபூர் கிராமத்தில் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறார். அப்பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு தலித் மாணவர், ஆசிரியரின் தண்ணீர் பாட்டிலை தொட்டதாக தெரிகிறது. இதனால், அந்த மாணவரை ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது. சாதி அடிப்படையிலான இந்த வன்முறை சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.