பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது

53பார்த்தது
பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது
பாம்பன் கடலில் புதிதாக அமைக்கப்பட்ட செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை இன்று (ஏப்.06) பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இலங்கையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்த அவர், பாம்பன் பால திறப்பு விழாவில் கலந்துகொண்டார். இந்நிலையில், புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்தை கீழே இறக்க முடியாமல் பழுதாகியுள்ளது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றம், இறக்கமாக உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி