மெட்ரோ ரயில் நிலையம் அருகே பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. இளைஞர் கைது

52பார்த்தது
சென்னை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வைத்து தன்னிடம் மர்ம நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, தப்பியோடியதாக 21 வயது இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்தனர். கார்த்திக் மெட்ரோ ரயிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி