மதுரை மாநகர் ஆனையூர்
பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது வீட்டின் முன்பு தனது விலையுயர்ந்த டாட்டா சஃபாரி மற்றும் அருகில் குடியிருக்கும் கனி என்பவரது XUV காரையும் கார் செட்டில் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் திடீரென கார் செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாபுவின் காரில் தீ்ப்பற்றியுள்ளது. இதனையடுத்து பின்னால் நின்ற காரிலும் தீ பற்ற தொடங்கியதோடு கார்கள் நிறுத்தியிருந்த கூரை செட் முழுவதும் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கி முழுவதும் மளமளவென எறிய தொடங்கிய நிலையில் கார்கள் முழுவதும் பற்றியது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயை விரைந்து அணைக்க முயற்சி செய்தனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலையடுத்து தல்லாகுளம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயை அணைத்தனர்.
இருந்தபோதிலும் தீ விபத்தில் சுமார் 40 லட்சம் மதிப்பலான கார்கள் முழுவதுமாக எரிந்தன.
இந்த தீ விபத்து வெயிலின் தாக்கத்தினால் காரில் தீ பற்றியதா? அல்லது மின் கம்பிகள் உரசியதில் ஏற்பட்ட தீயால் தீ பரவியதாக என்பது குறித்தும் கூடல் புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கார்களில் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.