வாடிப்பட்டி: தந்தை மாயம்; மகள் புகார்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வல்லப கணபதி நகர் மாதா கோவில் அருகே வசிக்கும் சுப்பிரமணியனின் மகன் பாண்டி( 52) என்பவரின் மனைவி கடந்த மூன்று வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் பாண்டி மதுவுக்கு அடிமையான காரணத்தால் தினமும் மது அருந்தி வந்திருக்கிறார். நேற்று (அக். 21) மது அருந்தி விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து திண்டுக்கல் ஆர் வி நகர் முனியப்பன் கோவில் தெருவில் வசிக்கும் அவரது மகள் லதா என்பவர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பாண்டியை தேடி வருகிறார்கள்.