தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
மதுரை அலங்காநல்லூர் பகுதியில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்க கோரி கையில் கரும்புடன் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததுபடி கரும்பிற்கு தன் ஒன்றுக்கு 4000 விலை கொடுக்க வேண்டும் என்றும்,
ஆலையில் நூறு கோடி செலவில் உப மின் நிலையம் அமைக்க 100 கோடி வரை செலவு செய்து 80 சதவீதம் வேலை முடிந்த நிலையில் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும் ஆலையில் 1000 ஏக்கருக்கு மேல் கரும்பு பதிவாகியுள்ளது.

மதுரை வேளாண்துறை கணக்கெடுப்பின்படி 4000 ஏக்கர் ஆலைக்குள்பட்ட பகுதிகளில் கரும்புகள் உள்ளது.

இந்த வருடம் ஆலை இயங்க போதுமான கரும்பு உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஒரே ஆலை மதுரை மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலை தான்.

எனவே இந்த ஆலையை நம்பி கரும்பு விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள் ஆலைத் தொழிலாளர்கள் உப தொழிலாளர்கள் டிராக்டர் ஓட்டுநர்கள் மற்றும் லோடு மேன்கள் என அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என கண்டன கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி