மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, நாச்சிகுளம் கிராமத்தில் உள்ள சுமார் 150 ஏக்கர் நிலத்திற்கு விவசாயம் செய்வதற்கு பெரியார் கால்வாயில் இருந்து கரட்டுப்பட்டி கிராமத்தின் நாச்சியார் மடைவழியாக தண்ணீர் பாசன வாய்க்காலில் வந்து இப்
பகுதியில் விவசாய செய்வதற்கு தண்ணீர் வரத்து வருடம் தோறும் கிடைத்து வந்தது.
தற்போது , மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய் கிராமப் பகுதியில் பதித்து அதை சரிவர மூடாமல் அதிலிருந்து எடுக்கப்பட்ட மண் பாசன வாய்க்கால் ஓரமாக குவியல் குவியலாக அள்ளி குவித்து விட்டு சென்று விட்டனர்.
அந்த நேரத்தில், விவசாய பணிகள் நடைபெறாதால், பாசன வாய்க்கால்
மூடி இருப்பது விவசாயிகளுக்கு தெரியாமல் இருந்தது.
தற்போது கடந்த
ஜூலை 3-ந் தேதி பேரணை முதல் கள்ளந்திரி வரை ஒருபோக பாசனத்
திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை கரட்டுப்பட்டி நாச்சிகுளம் விவசாயப் பகுதிகளுக்கு பாசன வாய்க்
காலில், தண்ணீர் வரவில்லை. இதற்கு காரணம் மாநகராட்சி குடிநீர் குழாய்க்கு தோண்டப்
பட்டு மண் மேவியதாலும் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட மணல் மேலும் குவியலாக வயல்வெளிகளில் கொட்டியதால், வாய்க்கால் இருக்கக்கூடிய இடமே தெரியாமல் பாசன கால்வாய் மூடி சுமார் 150 ஏக்கர் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.