அலங்காநல்லூர், கோவில் பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் குமார் (28). இவர் தனது பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தை எதிர்த்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தை கட்டாயப்படுத்தியதால் மனமுடைந்து இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இறந்தவரின் சடலம் உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்