சோழவந்தான்: சாலையில் திரியும் கால்நடைகளால் மக்கள் அவதி
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 18-வது வார்டு பகுதியான ஆர் எம் எஸ் காலனி பத்மா கார்டன் போன்ற பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் சாலையின் நடுவே படுத்துக்கொண்டு ஓய்வு எடுப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக ஆர் எம் எஸ் காலனி பத்மா கார்டன்பகுதிகளில் கால்நடைகள் குறுக்கும் நெறுக்குமாகவும் சாலையின் நடுவே படுத்துக் கொண்டும் இருப்பதாகவும் இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித்தும் சோழவந்தான் பேரூராட்சி சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உச்சபட்சமாக சாலை நடுவே இரண்டுக்கும் மேற்பட்ட கால்நடைகள் படுத்து உறங்குவதால் சாலையில் வரும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் இருப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக ஆர் எம் எஸ் காலனி பத்மா கடன் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் அதன் உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.