உறுப்பு தானம் செய்பவர்கள் ‘வாழும் நன்கொடையாளர்கள்’, ‘இறந்த நன்கொடையாளர்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இறந்த நன்கொடையாளர்கள் தன் உடம்பில் உள்ள 2 சிறுநீரகங்கள், இதயம், கணையம், நுரையீரல், கல்லீரல், குடல் ஆகிய உறுப்புகளை தானம் செய்ய முடியும். இறந்த பின் செய்யும் உறுப்பு தானமானது 8 உயிர்களை காப்பாற்ற உதவும். வாழும் நன்கொடையாளர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு 2 சிறுநீரகங்களில் ஒன்றையும், பகுதியளவு கல்லீரலையும் தானமாக வழங்க முடியும்.