பாஜக அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

51பார்த்தது
பாஜக அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் திராவிடர் கழக இளைஞர் அணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று(செப்.3) நடந்தது. இதற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து ராஜேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால், தமிழ்நாடு அரசின் கல்வித்துறைக்கு நிதியை ஒதுக்காத மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி