தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் கொளுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் 2 மணி அளவில் போச்சம்பள்ளி, புலியூர், புட்டன் கடை , அரசம்பட்டி பாரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.