மாற்றுத்திறனாளிகள் நல சங்கம்- மரக்கன்றுகள் வழங்கும் விழா.

61பார்த்தது
மாற்றுத்திறனாளிகள் நல சங்கம்- மரக்கன்றுகள் வழங்கும் விழா.
மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில், புத்தாண்டை முன்னிட்டு புது மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, பஞ்சபட்டியில் உள்ள மகாகவி மாற்றுத்திறனாளிகள் சமூக நல அறக்கட்டளை இல்லத்தில், 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு, அமைப்பின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி தலைமையில், தங்கதமிழ் மரம் வளர்ப்பு திட்டத்தில், 5- மாற்றுத் திறனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 50 மாற்றுத் திறனாளிகளுக்கு தினசரி காலண்டர் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் , கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த புரட்சி கலைஞர் விஜயகாந்த் மறைவிற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம், மாநில அமைப்பு மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கம், அகில இந்திய பிரமலை கள்ளர் நல அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் சார்பில், ஜெயசுதா, காளிதாஸ், ரோகிணிசெல்வி உள்ளிட்ட நிர்வாகிகளும் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து உதவி வரும், பல்வேறு தொண்டு உள்ளம் கொண்டோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி