சாமானிய மக்கள் நலக் கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள கரூர் வடக்கு லட்சுமிபுரம் பகுதியில், இன்று மாலை, கம்யூனிஸ்ட் போராளி செங்கோடியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சாமானிய மக்கள் நல கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், கரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சண்முகம், சமூக செயல்பாட்டாளர்கள் குணசேகரன் மற்றும் மோகன்ராஜ், விசிக கரூர் நகர பொருளாளர் ரகுமான், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட சாமானிய மக்கள் நலக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணசேகரன் பேசுகையில், இந்தியாவில் மரண தண்டனைக்கு எதிராக நடைபெற்ற பல்வேறுவகையான போராட்டங்களில் இறுதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் தனது இறுதி உயிராக தீக்குளித்து இன்னுரை நீத்த தோழி செங்கொடி, தொடர்ந்து ஈழத் தமிழர்களின் பல்வேறு கட்ட போராட்டங்களில் பங்கெடுத்து போராடி வந்தார். 27 வயது நிரம்பிய செங்கொடியின் உயிர்த்தியாகம், அந்நாளில் வீரமங்கை செங்கொடி என தமிழர்களால் போற்றப்பட்ட பெண்ணாக திகழ்ந்தவர் என்று புகழஞ்சலி உரையில் பேசினார்.