கரூரில், கொடூர செயலில் ஈடுபட இருந்த 7-பேர் ஆயுதங்களுடன் கைது.
கரூர் மாவட்டம், ராயனூர், பழனிவேல் நகரைச் சேர்ந்த ராமசுப்பிரமணி என்பவர், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, திருமாநிலையூரை சேர்ந்த ஷோபனா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு, மேற்கண்ட விலாசத்தில் வசித்து வந்தார். சோபனாவின் வீட்டில் அவ்வப்போது தங்கி வந்த அவரது தோழியான ரம்யா என்பவருக்கும், அருகிலுள்ள தொழில்பேட்டையைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததால், விஜயின் குடும்பத்தினருக்கும், சோபனாவிற்கும் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி பிரச்சனை ஏற்பட்டு தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தப் பிரச்சினையை மனதில் வைத்து, சோபனாவின் கணவர் ராமசுப்பிரமணி விஜயின் உறவினர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் தனது வீட்டில் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ராமசுப்பிரமணி வீட்டில் சோதனை மேற்கொண்டு ஆயுதங்களை கைப்பற்றி, தனிப்படை காவல்துறையினர் ராமசுப்பிரமணியிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது கூட்டாளிகளான நாமக்கல் ரஞ்சித் சக்கரவர்த்தி, திருச்சி பெரிய கோபால், திருப்பூர் சின்னசாமி, ஈரோடு யுவராஜ், மூர்த்தி, கரூர் பாலகிருஷ்ணன் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து நடைபெற இருந்த பெரும் அசம்பாவிதத்தை தடுத்துள்ளனர். இவர்களிடமிருந்து 2- கை துப்பாக்கிகள் 6- தோட்டாக்கள் பல்வேறு விதமான அறிவாள், கத்திகளும் பறிமுதல் செய்தனர்.