கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் நேற்று (ஆக.,24) பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பயிலரங்கு நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல் படி கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கு சிறப்பு விருந்தினராக சேலம் பெருங் கோட்ட அமைப்பு செயலாளர் நாராயணன், சேலம் கிழக்கு பெருங்கோட்ட செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டார். மேலும் இதில் பாரதிய ஜனதா கட்சி கரூர் மாவட்ட நிர்வாகிகள், புதிய பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.