அதிகாரிகள் கருத்துக்கு குமரி மீனவர்கள் எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், மீனவர்கள் கூறிய சில கருத்துகளுக்கு அதிகாரிகள் 'நாங்கள் சொல்வதையும் கேளுங்கள்' என்று கூறியதை தொடர்ந்து, மீனவர்கள் அதிகாரிகளை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.