விளவங்கோடு - Vilavengodu

கொல்லங்கோடு: ஆட்டோ டிரைவர் தற்கொலை

கொல்லங்கோடு: ஆட்டோ டிரைவர் தற்கொலை

கொல்லங்கோடு அருகே சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் காசிராஜன் (60) ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உண்டு. காசிராஜ் நோய் பாதிப்பு உள்ளவராக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை காசிராஜை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் காசிராஜ் விஷம் குடித்துள்ளார் என்று கூறியதை அடுத்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காசிராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி மல்லிகா (44) என்பவர் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా