மார்த்தாண்டம்: வாகனம் மோதி பிளம்பர் படுகாயம்

62பார்த்தது
மார்த்தாண்டம்: வாகனம் மோதி பிளம்பர் படுகாயம்
மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் மகன் ரெஜி (38). இவர் பிளம்பராக வேலை செய்கிறார். சம்பவ தினம் ரெஜி காஞ்சிரக்கோடு பகுதியில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் ரெஜி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சேவியர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விபத்து ஏற்படுத்தியதாக மார்த்தாண்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் விஜயகுமார் (66) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி