கருத்தடை செய்த பிறகும் பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் ரூ.60,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடும்ப நல அலுவலர் முறையாக கருத்தடை செய்யாததே, தன் மனைவி மீண்டும் கருவுற காரணம் என தூத்துக்குடியை சேர்ந்த ராஜா சுப்பிரமணியன் என்ற மனுதாரர் கூறியிருந்தார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் குடும்ப நல மருத்துவ அலுவலர் 2 வாரங்களில் ரூ.60,000 இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.