“இந்து-முஸ்லிம் மோதலை அனுமதிக்க மாட்டோம்” - மம்தா பானர்ஜி

78பார்த்தது
“இந்து-முஸ்லிம் மோதலை அனுமதிக்க மாட்டோம்” - மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தின் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட வக்பு (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் வன்முறை வெடித்தது. இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “நாங்கள் இருக்கும் வரை இந்து - முஸ்லிம் மோதலை அனுமதிக்க மாட்டோம். வங்கதேசத்தினர் மேற்கு வங்கத்திற்கு வந்து வன்முறையில் ஈடுபட்டால், மத்திய அரசு அவர்களை எல்லையிலேயே ஏன் தடுக்கவில்லை?” என கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி