ஓணம் பண்டிகை; தோவாளையில் பூக்களின் விலை உயர்வு

62பார்த்தது
குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தையில் தினந்தோறும் பல டன் பூக்கள் விற்பனையாகிறது ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை யொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை அமோகமாக நடைபெறும். அந்த வகையில் நாளை (செப்.,15) ஓணம் பண்டிகை என்பதால் தோவாளையில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது.

அத்த பூ கோலமிடுவது, பூக்களால் அலங்கரித்து ஓண ஊஞ்சல் ஆடுவது, பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உள்ளூர் வியாபாரிகள் முதல் கேரள வியாபாரிகள் வரை தினமும் பூக்களை அள்ளி செல்கின்றனர்.தோவாளை மலர்சந்தையில் பூக்களை வாங்கி செல்வதற்காக வியாபாரிகளும், பொதுமக்களும் இன்று (செப்.,14) அதிகாலையிலே அதிக அளவில் வந்தனர்.

தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ. 2500, பிச்சி ரூ. 1800, கொழுந்து ரூ. 140, மரிக் கொழுந்து ரூ. 140, மஞ்சள் கேந்தி ரூ. 55, ஆரஞ்சு கேந்தி ரூ. 60, வெள்ளை செவ்வந்தி ரூ. 190, மஞ்சள் செவ்வந்தி ரூ. 170, வாடாமல்லி ரூ. 200, கோழிக்கொண்டைப்பூ ரூ. 60, தாமரை ரூ. 10 என விற்பனையானது. அந்த வகையில் பூக்களின் விலை சுமார் 3 மடங்கு உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி