போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க சிஐடியு மக்கள் சந்திப்பு

82பார்த்தது
போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க சிஐடியு மக்கள் சந்திப்பு
நெருக்கடியில் உள்ள போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வரவுக்கும் செலவுக்கான வித்தியாசத்தொகையை வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கான்ட்ராக்ட் புகுத்தலை கைவிட வலியுறுத்தியும், தனியார் மினி பேருந்து இயக்க முடிவை கைவிட்டு அரசே மினி பேருந்து இயக்க வலியுறுத்தியும்,
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 105 மாத அகவிலைப்படியை வழங்க கோரியும், 2022 க்கு பின் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய பண பல பலன்களை வழங்க கோரியும் தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து சி ஐ டி யு தொழிலாளர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
குழித்துறை பணிமனை சார்பில் கருங்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குழித்துறை கிளை தலைவர் சஜித்குமார் தலைமை தாங்கினார். பிரச்சார நோக்கங்களை விளக்கி போக்குவரத்து சம்மேளன நிர்வாக குழு உறுப்பினர் சங்கரநாராயணன், பணிமனைச் செயலாளர் பனிதாஸ், சி ஐ டி யு மாவட்டத் துணைத் தலைவர் பொன். சோபனராஜ் ஆரியோர் பேசினர்கள்.
ரசலானந்தராஜ், ஜான்கிறிஸ்டோபர், டேவிட்ராஜ், கிறிஸ்டோபர், ஜெரால்ட், செலஸ்டின்ராஜ் ஓய்வு பெற்றோர் நல அமைப்பைச் சார்ந்த பால்நாடார், எலியாஸ், கிருஷ்ண பிரசாத், செல்வ தாஸ், கிருஷ்ணதாஸ் உட்பட பலர் பங்கெடுத்தனர்.

தொடர்புடைய செய்தி