சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான 'புஷ்பா 2 தி ரூல்' படம் கடந்த 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சாம் cs பின்னணி இசையமைத்திருந்தார். இந்நிலையில் படம் வெளியான 22 நாட்களில் ரூ.1720 கோடி வசூல் செய்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.