உ.பி: கிராத்பூரில் இருந்து பைக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பிஜ்னோர் நோக்கி சென்று கொண்டிருந்த போது புத்பூர் நைன் சிங் கிராமத்திற்கு அருகே ஒரு வேனின் டயர் வெடித்தது. இதில் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியதில் பைக்கில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.