தாய்லாந்து ZOOல் பராமரிக்கப்பட்டு வரும் ‘மூ டெங்’ என்ற நீர்யானைக் குட்டிக்கு, கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் புடெரின், கிறிஸ்துமஸ் பரிசாக ரூ.2.5 கோடியை வழங்கியுள்ளார். அழிந்து வரும் உயிரினமான இந்த வகை நீர்யானையை பராமரிக்க பணம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் பெயர் எழுதிய தர்பூசணியை உண்டதால், அவரே அதிபராக தேர்வு செய்யப்படுவார் என கணித்து மூ டெங் பிரபலமானது.