நாசாவின் PARKER SOLAR PROBE என்ற விண்கலம், சுட்டெரிக்கும் சூரியனுக்கு மிக அருகில் சென்று புதிய வரலாறு படைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய PARKER SOLAR PROBE ஆளில்லா விண்கலம் 2018-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், சூரியனின் மேற்பரப்பிலிருந்து 6.1 மில்லியன் கி.மீ தூரத்தைக் கடந்த பார்க்கர் விண்கலம் பாதுகாப்பாக இருப்பதாக நாசா தகவல் அளித்துள்ளது. நாளை (டிச.28) காலை 10.30 மணியளவில் விண்கலத்திலிருந்து சிக்னல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.