இந்திய மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை என்று, இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். தமிழக மீனவர்களை அத்துமீறி இலங்கை கடற்படை கைதுசெய்து வருகிறது. இதை தடுக்குமாறு, மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பும் நிலையில், சந்திரசேகரனின் பேச்சு, தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலும் நீடிக்கிறது.