பாண்டூர் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு
திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூர் கிராமத்தில் பாலாற்று படுகையில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூர் கிராம பாலாற்று படுகையில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு பாண்டூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி ஆழ்துளை கிணறு அமைக்க திருக்கழுக்குன்றம் தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் முனைப்பு காட்டியதால் 100 க்கும் மேற்பட்ட போலீசாருடன் ஆழ்துளை கிணறு அமைக்க சென்றனர் இது குறித்து தகவலறிந்த பாண்டூர் கிராம பெண்கள் 50 க்கும் மேற்பட்டோர் போர் போடும் வாகனத்தை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாண்டூர் கிராம மக்கள் கூறுகையில் எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டாம் என்றும் மேற்கு புறமாக சென்று பாலாற்றுப்படுகையில் ஆழ்துளை கிணறு அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர் இதனால் போர் போடும் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.