மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை தாக்கியவர் கோர்ட்டில் ஆஜர்

50பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம்
மாமல்லபுரம் ஐந்து ரதம் அருகே கார் பார்க்கிங் செக்யூரிட்டி ஏழுமலை தாக்கியதாக வீடியோ வைரல் ஆன நிலையில் செக்யூரிட்டி தாக்கியதாக1 கீர்த்தனா 2 சண்முகப்பிரியா 3 பிரபுதாஸ் ஆகியோர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திருப்போரூர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் மாமல்லபுரம் போலீசார் ஆஜர் படுத்தினர் அப்போது கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எங்கள் கார் மீது தடியால் அடித்தும் எங்கள் காரில் உள்ள குழந்தைகள் மீது காரி எச்சிலை துப்பிய காரணத்தினால் நாங்கள் இறங்கி கேட்ட போது புறம்போக்கு என்றும் தகாத வார்த்தைகளை பேசினார். அப்போது வீடியோ யாரும் எடுக்கவில்லை அதன் பிறகு நாங்கள் கீழே இறங்கி கேட்டபோது எங்களை தரக்குறைவாக பேசியதால் மட்டுமே நாங்கள் அவரை தாக்கினோம் உண்மையான முழு வீடியோவையும் வெளியிடும்படி கைது செய்யப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டனர் போலீசார் திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மூன்று நபருக்கும் நீதிபதி 05. 11. 2024 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது மூன்று பேரில் பிரபுதாஸ் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கவும் சண்முகப்பிரியா மற்றும் கீர்த்தனா ஆகியோர் புழல் சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார் இதனை அடுத்துசிறையில் அடைக்க காவல்துறையினர் மூவரையும் அழைத்துச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி