மறைமலைநகர் ரயில் நிலையத்தில் ரயில் மோதி தம்பதியர் பலி

85பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் நின்னக்கரை பகுதியில் வசித்து வந்தவர்
செந்தில் வேலன் (82), பசும்பொன் (71) தம்பதி, இவர்கள் இருவரும் ராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு செல்வதற்காக மறைமலைநகர் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மின்சார ரயில் மூலம் செங்கல்பட்டு சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல இருந்தனர்.

இந்த நிலையில் இருவரும் மறைமலைநகர் ரயில் நிலையத்திற்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதால் அப்போது ரயில்நிலைய நடைமேடை செல்வதற்காக ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்துள்ளனர் அப்போது அதிவேகமாக வந்த பல்லவன் விரைவு ரயில் இருவர் மீதும் மோதி தூக்கி வீசியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கணவன் மனைவி இருவரும் தலை, கை, கால், உடைந்து பலத்த காயம் ஏற்பட்டும், உடல் துண்டாக சிதறியும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.

பின்பு இதுகுறித்து சக பயணிகள் தாம்பரம் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தாம்பரம் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தாம்பரம் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி