தாராபுரம் விவேகம் ப்ரைம் அகாடமியில் மழலையர் பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா பிரிவின் மாவட்டத் தலைவர் உதயா சுப்ரி பி.ஏ. கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். இவ்விழா நிகழ்வின் முக்கியத் தருணமான பட்டமளித்தல், பள்ளித் தாளாளர் முனைவர் இரா. சுப்பிரமணியன் மற்றும் சிறப்பு விருந்தினர் அவர்களால் வழங்கப்பட்டது. மலருக்கு மணிமகுடம் சூட்டுவது போல் மழலையர்கள் பட்டம் பெறுவதைக் கண்டு பெற்றோர் பெருமிதம் அடைந்தனர்.