செங்கல்பட்டு அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம். எல். ஏ கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுவை வாங்கினார்.
பொதுமக்கள் இணையவழி வாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரைவாகவும் பல்வேறு துறைகள் மூலம் பெற்றுவரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி “மக்களுடன் முதல்வர்” திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியில்
தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது
தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் தலைமையில் நடைபெற்ற முகாமில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுவை பெற்றார்.
இந்த முகாமில் வருவாய்த்துறை மின்சாரத்துறை மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட 15 துறை சார்ந்த அதிகாரிகளிடம் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் துறை சார்ந்த அதிகாரியிடம் மனுக்களை வழங்கினார்
இதில் திம்மாவரம், ஆத்தூர், வில்லியம்பாக்கம் பாலூர் உள்ளிட்ட ஊராட்சியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.