ஸ்ரீ பெரும்பதூர் - Sri Perumbadhur

துர்நாற்றம் வீசும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

துர்நாற்றம் வீசும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அவதி செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டது தொடர்ந்து, புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு நான்காண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனைத் தொடர்ந்து புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. திறப்பு விழா மேற்கொள்ளப்படாமலே, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பயன்பாட்டிற்கு வந்து ஓராண்டுகள் கடந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழிவறை துர்நாற்றம் வீசுவதாகவும், கழிவுநீர் வெளியேறாமல் கழிவறையில் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதுபோன்று கால்நடைகள் பொது இடத்தில் உலா வருவது தடை செய்யப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே கால்நடைகள் உலா வருவது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வயதானவர்களை மாடுகள் தாக்கும் சம்பவங்கள் நடைபெறும் நிலையில் அவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பது மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தை காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా