செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நகராட்சி, மறைமலைநகர் நகராட்சி, தாம்பரம் மாநகராட்சி குன்றத்தூர் பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 300டன் முதல் 450டன் குப்பைகள் உருவாகின்றன இந்த குப்பைகள் அனைத்தும் லாரிகள் மூலமாக காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான மேயக்கால் புறம்போக்கு நிலம் 44 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொட்டப்பட்டு வருகிறது
இந்த குப்பை கிடங்கில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு தற்போது குப்பைகள் மலை போல் தேங்கியுள்ள நிலையில்
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் லாரிகள் ஸ்ரீ பெருமந்தூர் மாநில நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்படுகிறது
அப்போது லாரியிலிருந்து குப்பை கழிவுகள் சாலையில் சிதறுகிறது அது மட்டுமல்லாமல் கழிவுகளில் வரும் நீர் சாலையில் ஊற்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது அது மட்டுமல்லாமல் சாலை முழுவதுமே சுமார் கொளத்தூர் முதல் ஆப்பூர் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையிலும் ஸ்ரீபெரும்புதூர் மாநில நெடுஞ்சாலை முழுவதுமே மணல் துகள்கள் காணப்படுகிறது இதனால் அவ்வப்போது அவ்வழியாக சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் மூக்கை பொற்றிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.