தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை துவங்கிய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் மாதம் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மறைமலைநகர் அடுத்த கருநீலம் ஊராட்சியில் வசித்து வருபவர் தனசேகர் கலைச்செல்வி தம்பதியினர். அவர்களின் 3 பிள்ளைகளும் பள்ளி விடுமுறை என்பதால்
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மழையினால் சேதமடைந்து வீட்டின் மேற்கூரை இடிந்து மேலே விழுந்தது. லேசான சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக மூன்று பேரும் உயிர்தப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.