எலப்பாக்கம் மின்வாரிய அலுவலகம் முற்றுகை போராட்டம்

72பார்த்தது
பள்ளி மாணவன் உயிரிழப்புக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என உறவினர் மற்றும் பொதுமக்கள் மின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் துணை மின் நிலையத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான ட்ராக்டர் மின் கம்பங்களை ஆணைக்குன்றம் கிராமத்தில் உள்ள தனியார் கல் கோரைக்கு ஏற்றி வந்த நிலையில்

அச்சரப்பாக்கம் ஈபி காலனி பகுதியில் எதிர்பாராத விதமாக ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள முள் புதரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்
பேருந்து இல்லாமல் டிராக்டரில் பயணம் செய்த அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அபிஷேக் என்ற பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இந்த நிலையில் மாணவனின் உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டும் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் எலப்பாக்கத்தில் உள்ள மின்சார அலுவலகத்தை உயிரிழந்த மாணவனின் உறவினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்



தகவல் அறிந்து வந்த ஒரத்தி காவல்துறையினர் மற்றும் இளநிலை உதவி பொறியாளர் ஆகியோர் பாதிக்கப்பட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி