மாமல்லபுரம் கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

2223பார்த்தது
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம்காணப்பட்டன

செங்கல்பட்டு மாவட்டம் உலகப்பிரசித்தி பெற்ற மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட்டு கடலில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாகவும் நாளை காணும் பொங்கல் கொண்டாடும் விதத்திலும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் இன்று குவிந்துள்ளனர் நாளை அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரும் காரணத்தினால் இன்று ஆயிரக்கணக்கான ஊர் மாமல்லபுரத்திற்கு வருகை தந்து சுற்றி பார்த்து வருகின்றனர்.

அதிக அளவில் சுற்றுலா பயணிகள் மற்றும் கார்கள் என அதிக அளவில் வாகனங்கள் வரக்கூடும் என்பதால் மாமல்லபுரத்துக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது கிழக்கு கடற்கரை சாலை பூஞ்சேரி மருத்துவமனை அருகே தனலட்சுமி காலேஜ் என கிழக்கு கடற்கரை சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வரும் சுற்றுலா பயணிகளை 15 மினி பேருந்துகள் மூலமாக மாமல்லபுரம் நகருக்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள் சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்தை பார்வையிட்டு திரும்பி எங்க ஏறினார்களோ அங்கு இறக்கி விடப்படுவார்கள் இதற்கான பாதுகாப்பு பணிகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர் நாளை மாமல்லபுரம் கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி