சி. ஐ. டி. யு போராட்டத்தால் சிக்கல்: சாம்சங் தொழிற்சாலை திணறல்

83பார்த்தது
சி. ஐ. டி. யு போராட்டத்தால் சிக்கல்: சாம்சங் தொழிற்சாலை திணறல்
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 1, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் ஒரு வாரமாக வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சம்பளம், வேலை நேர பிரச்னைகளை முன்வைத்து, கம்யூனிஸ்ட் கட்சியின் சி. ஐ. டி. யு. , தொழிற்சங்கம் துவங்க, இங்கு தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் ஒருங்கிணைந்தனர். ஆனால், சி. ஐ. டி. யு. , உள்ளிட்ட கட்சி சார்ந்த தொழிற்சங்கங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு தொழிற்சாலை நிர்வாகம் மறுத்தது. இதற்கு பதிலாக, நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் இடம் பெறும் வகையில் ஒரு குழு அமைப்பதற்கும், அதன்வாயிலாக தொழிலாளர்களின் குறைகள், கோரிக்கைகளை முன்வைப்பதற்கும், பேச்சு நடத்தவும் நிர்வாகம் முன் வந்தது.

இந்நிலையில், இந்த பிரச்னையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, தொழிற்சங்கம் துவக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சி. ஐ. டி. யு. , மாநில செயலர் முத்துக்குமார் தலைமையில், நேற்று(செப்.19) காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் பேரணி செல்ல முயன்றனர். சாம்சங் ஊழியர்கள், 1, 500 பேரில் 110 பேர் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி