பருத்தி ஆடைகளில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்

67பார்த்தது
பருத்தி ஆடைகளில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்
பருத்தி ஆடைகளை சூடான நீரில் துவைக்கக் கூடாது. குளிர்ந்த நீரில், மெல்லிய ரக டிடர்ஜென்ட் கொண்டு துவைக்க வேண்டும். வெள்ளை நிற பருத்தி ஆடைகளை மற்ற துணிகளுடன் துவைக்க கூடாது. அது பருத்தி துணியின் நிறத்தை மாற்றிவிடும். உச்சி வெயிலில் பருத்தி துணிகளை காயப் போடக்கூடாது. அது துணியை சுருங்க செய்துவிடும். இஸ்திரி செய்யும் போது சரியான வெப்பநிலையில் செய்ய வேண்டும். இல்லையெனில் துணியின் ஆயுட்காலம் குறைந்துவிடும்.

தொடர்புடைய செய்தி