திருக்கழுக்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுக்க கோரி ஆர்ப்பாட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் மற்றும் கட்டளை சொத்துக்களை தனிநபர்கள் அனுபவித்து வருவதாகவும், கருணானந்தா மடம் உள்ளிட்டவைகளை மீட்டெடுக்க கோரியும் "வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சொத்துக்கள் மீட்பு குழு" சார்பில் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலையடிவார வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் பாஜக பொறுப்பாளர் துரை தனசேகரன் தலைமையில் நடைபெற்றது, இந்து முண்ணனி பொறுப்பாளர்கள் ஆர். டி. மணி, மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள வேதகிரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் முறையான கணக்கீடு செய்து பாராபட்சமின்றி மீட்க வேண்டும் என்றும் முறையான அனைத்து ஆவணங்களையும் துறை சார்ந்த நிர்வாகத்திடம் வழங்கியும் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் பாஜக , இந்து முண்ணனி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி